மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட 50வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று மக்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிந்தார்

Published Date: October 15, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட 50வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று மக்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிந்தார்.

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட தைக்கால் தெரு, திருமலைராயர் படித்துறை, கிருஷ்ண ஐயங்கார் தோப்பு, சிம்மக்கல்,  நடராஜபுரம், அக்ரஹாரம் உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் வீடுகளுக்கு சென்று அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களது குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ஒரு சில பகுதிகளில் வயது முதிர்ந்தவர்கள் அவரை அரவணைத்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி தலைமை பொறியாளர் பாபு, நிர்வாக பொறியாளர் எஸ்.சேகர், உதவியாளையாளர் பிரபாகர், உதவியின் நிர்வாகப் பொறியாளர்கள் முத்து, ஆர்.கனி, உதவி நகர் நல அலுவலர் அபிஷேக், வட்ட செயலாளர் ராஜேந்திரன், நெசவாளர் அணி சிம்மக்கல் வெள்ளத்துரை, உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக சிம்மக்கல் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ நலவாரியத்தின் சார்பாக அடையாள அட்டை வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

Media: Tamil Murasu